தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி கண்ணம்மாள் வயது 75 சம்பவம் நடந்த நேற்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது காரை பின்னோக்கி செலுத்திய போது பின்னால் நின்ற கண்ணம்மாள் மீது மோதியதில் உடல் நசுங்கி மூதாட்டி கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி கண்ணம்மாளின் பேரன் கோபி அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிந்து தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.