மணப்பாறை: இரண்டு பைக்குகள் மோதி விபத்து முதியவர் பலி

மணப்பாறை அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் பிச்சை (வயது 60). இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று விட்டு, தோட்டத்தில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் பாலப்பட்டி பிரிவு ரோட்டில் வடக்கிலிருந்து தெற்காகச் சாலையைக் கடக்க முயன்றபோது, அப்பகுதியில் வந்த யமாஹா ஆர்1 பைக் ஒன்று அவருடைய பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த அவர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டியான திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மீது வழக்குப்பதிந்து, வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி