தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் ஒன்பதாம் தேதி விமானம் மூலம் திருச்சி வரவுள்ளார். இதைத் தொடர்ந்து, திருச்சி மாநகரில் வருகின்ற 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவானது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.