உப்பிலியபுரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலிபுரத்தில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை பாஜக வஞ்சித்ததாகக் கூறி, அதற்கு துணைபோகும் அதிமுகவைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "என்னாச்சு என்னாச்சு நாங்கள் கட்டிய வரி என்ன ஆச்சு? வாங்கும்போது இனிக்குதா எங்களுக்கு நிதி தரும் போது கசக்குதா?" என கோஷமிட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வம், அசோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி