திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் ஆகியோர் தலைமையில், திமுகவினர் SiR கணக்கீட்டு படிவங்களை விநியோகிப்பதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.