திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருகின்ற 11-ந்தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எஸ். ஐ. ஆர். கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளன.