ராமநாதபுரம் மாவட்டம் பூவிளம் கிராமத்தைச் சேர்ந்த பொன்மலர் என்ற பெண் துறையூர் அருகே சர்பிடி நகர் பகுதியில் ஆடு மேய்த்து வருகிறார். கடந்த நான்காம் தேதி அவரிடம் ஆடு மேய்க்கும் போது பதினொரு சவரன் தங்கச் சங்கிலியை இரண்டு மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த துறையூர் காவல்துறையினர் செயின் திருடிய நடராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த சூர்யா சுகுமார் ஆகிய இருவரையும் 48 மணி நேரத்தில் கைது செய்து அவர்களிடம் இருந்து தங்க நகையை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து உடனடியாக நகையை மீட்ட துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் சத்தியம் சரவணன் தலைமையில் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து சால்வைப் போர்த்தி மரியாதை செலுத்தினர்.