திருச்சியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய துணை முதல்வர்

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மாநகராட்சி மற்றும் ஐந்து நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 401 வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 651 தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி