திருச்சி மாவட்டம் துறையூரில் 18.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கல்லூரி கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்வை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் பூமி பூஜை செய்து, அடி கல்லை நட்டு புதிய கட்டிடப் பணிகளைத் துவக்கி வைத்தனர்.