அப்போது போலந்து நாட்டில் மாதம் ரூ. 1.50 லட்சம் சம்பளத்தில் கட்டிட கட்டுமான பணி வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி உள்ளார். ஆனால், விசா வாங்கித் தராமல் ஏமாற்றிய பாலன், அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து மதியழகன் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பட்டுக்கோட்டையில் பாலனின் 2வது மனைவி சரண்யா கொலை செய்யப்பட்டார்.
அதன் பின்னரே பட்டுக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் பாலன் இருப்பது மதியழகனுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாலன் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டுத்தருமாறு துவரங்குறிச்சி போலீசில் மீண்டும் நேற்று மதியழகன் புகார் அளித்துள்ளார். 2வது மனைவியை கொலை வழக்கில் பாலன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.