துறையூரில் துணை சபாநாயகர் ஆணைக்கிணங்க பேருந்து சேவை தொடக்கம்

துறையூரில் பேருந்து நிலையம் பராமரிப்பு பணிகளால் பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக அலைக்கழிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கரின் ஆணைக்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி துறையூர் பழைய பேருந்து நிலையம் முதல் புதிய தற்காலிக பேருந்து நிலையம் வரை போக்குவரத்து பணிமனை சார்பில் பேருந்து சேவை இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து துணை சபாநாயகருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி