துறையூர் சுமை தூக்கும் தொழிலாளி உடல் கிணற்றில் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் கீரம்பூர் சாலையில் உள்ள அங்காயி கோவில் அருகே கிணற்றில் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், துறையூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பெரியசாமி என தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி