திருச்சி அதிமுகவில் இணைந்த பாஜகவினர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி அவர்கள் முன்னிலையில் மணிகண்டம் வடக்கு ஒன்றியத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு மண்டல தலைவர் திருச்சி தீபா உட்பட 25 நபர்கள் அஇஅதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். ஜெயக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சமயபுரம் ராமு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அருண், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தர்மேந்திரன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாகனூர் மணிகண்டன், சோமரசம்பேட்டை நவனீ உட்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி