மணப்பாறை: சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி

மணப்பாறை எடுத்து கே. பெரியபட்டி புதூரைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி மகேஸ்வரி தம்பதியினர் இருவரும் ஜூன் எட்டாம் தேதி டூவீலரில் நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்ற போது நொச்சிமேடு அருகே பின்னால் வந்த சுற்றுலா வேன் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். 

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி அன்றைய தினமே உயிரிழந்தார். இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 11) உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய திருச்சி மாவட்டம் மேல குழுமணி சுப்பிரமணியன் மகன் சிவா மீது வழக்கு பதிந்துள்ள மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி