திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று வெள்ளிக்கிழமை தனது தொகுதியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார். நவல்பட்டு அண்ணா நகர் அரசு பள்ளியில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மேலும், நாவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சுகாதார வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்.