அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற மூதாட்டி பலி

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கவிதா இவர் தனது உறவினர்களான லோகலட்சுமி முத்துவேல் ஆகியோர் அழைத்துக் கொண்டு காரில் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். முன்னாள் சென்ற பேருந்து பயணிகளை இறக்கி விட நின்று கொண்டிருந்ததால் பேருந்தின் பின் காரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கவிதா ஒட்டி வந்த காரின் மீது மோதியதில் முன்னாள் நின்றிருந்த பேருந்து மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த மூதாட்டி லோகலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காயமடைந்த கவிதா முத்துவேல் இருவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி