திருச்சி மாவட்டம் துறையூரில், திமுக அரசின் 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியைக் கண்டித்து, துறையூர் யூனியன் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் நகர செயலாளர் அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், காமராஜ், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.