முகாமில் குழந்தைகள் கல்வி உதவித்தொகை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பிறப்புச் சான்று வாரிசு சான்றிதழ் காப்பீட்டு திட்ட அட்டை குடும்ப அடையாள அட்டை மருத்துவ உதவி மற்றும் குழந்தைகளுக்கான தொழில் பயிற்சி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா, குழந்தைகளின் பெற்றோரிடம் நேரடியாக விசாரித்து மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு காண துறை சார்ந்த அலுவலர்களுக்கு மனுக்களை ஒதுக்கீடு செய்து தீர்வு காண அறிவுரை வழங்கினார். மேலும் முகாமில் பங்கேற்ற பொது மக்களிடமிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மாவட்ட அளவில் அரசு துறை அதிகாரிகளும் துறையூர் வட்டார அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் முகாமில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்