உப்பிலியபுரம்: புத்தகக் கண்காட்சியில் 92 மாணவர்கள் பங்கேற்பு

உப்பிலியபுரம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, த.பாதர் பேட்டையிலிருந்து 92 மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் கண்காட்சியை மகிழ்ச்சியுடன் கண்டு, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கினர். வானியல் அரங்கில் செயற்கைக்கோள், நிலா, விண்வெளி வீரர்கள் போன்றவற்றை மாணவர்கள் கண்டு ரசித்தனர். தலைமை ஆசிரியர் திருமதி தனலட்சுமி, அறிவியல் ஆசிரியர் தலைமையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி