மணப்பாறை அருகே கொல்லம்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவிக்கு ஆறு மாதங்களுக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில், ஆண் குழந்தைக்கு கடந்த 4ஆம் தேதி குளத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார், குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.