திருச்சி விமான நிலையத்தில், விமானங்களில் அதிக சுமையுடன் செல்லும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் சுமைத்தொகை சுமார் ₹49 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் பணியாளர் ஒருவரை விமான நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவினர் கடந்த மூன்று நாட்களாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.