திருவெறும்பூர்: கத்தியை காட்டி பணம் பறித்த 4 ரவுடிகள் கைது

திருவெறும்பூர் அருகே வாலிபரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த 4 ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோண்ராஜ் இவரது மகன் விவேக் (34) இவர் கூத்தைப்பார் செவந்தான் குளம் கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்போது அந்த வழியாக வந்த மேலகுமரேசபுரம் சாமியார் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பிரபல ரவுடியான முயல் கார்த்தி (32) அவனது நண்பர்கள் ஆன திருவெறும்பூர் காந்திநகரைச் சேர்ந்த போலீஸ்குமார் மகன் ரவுடி சுரேஷ் குமார் (32), காட்டூர் அன்னதாசன் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ரவுடி முத்துப்பாண்டி (28), வடக்கு காட்டூர் அண்ணாநகர் ராஜவீதியைச் சேர்ந்த சார்லஸ் மகன் ரவுடி சந்தோஷ் சாலமன் ராஜ் (25) ஆகிய நான்கு பேரும் விவேகிடம் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து விவேக் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கூத்தைப்பார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி