துறையூர் அருகே பூட்டி இருந்த வீட்டில் 3 சவரன் நகை திருட்டு

துறையூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அவரது மகன் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் 5000 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி