திருச்சியில் கொள்ளை அடிக்க திட்டம்; ஆயுதங்களுடன் 3 பேர் கைது

திருச்சி பொன்மலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றது. போலீசார் துரத்தி பிடித்ததில் கொட்டப்பட்டு ஜே ஜே நகர் சேர்ந்த சக்திவேல், பொன்மலை மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த முகமது ஜப்ரான், ரோஹித்தான் ஆகிய மூவரும் போலீசிடம் பிடிபட்டனர். அவர்கள் அப்பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களிடம் இருந்து கத்தி, கயிறு, மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவராமன், ஜான்போஸ்கோ நாதன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி