திருச்சியில் 268 கிலோ குட்கா பறிமுதல்..2 பேர் கைது

திருச்சி தஞ்சாவூர் சாலை கைலாசநாதர் கோவில் அருகே வீடு ஒன்றில் குட்கா பதுக்கல் மற்றும் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அஜித் குமார் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் சர்மா ஆகியோர் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. போலீசார் ₹7 லட்சம் மதிப்புள்ள 268 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி