கார் சூரியூர் ரிங் ரோடு சந்திப்பு அருகே வந்தபோது பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் சைகை காட்டி காரை நிறுத்தி தமிழ்மணியிடம் இருந்து ஆறு சவரன் மதிப்பிலான தங்க நகையை பறித்து சென்றனர்.
மேலும் கார் ஓட்டுநர் நிர்மல் குமாரின் மொபைல் ஃபோனையும் பறித்துச் சென்று தப்பி ஓடினார். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட தஞ்சாவூர் சின்ன அரிசிக்காரர் தெருவை சேர்ந்த அருள் என்கிற அருள் பிரகாஷ் தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதி நாடார் தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. திருட்டு நகை என தெரிந்தும் அதை வாங்கி மறைத்து வைத்திருந்த பாஸ்கருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மீனாட்சி சந்திரா தீர்ப்பளித்தார்.