திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நேற்று (மார்ச் 12) இரவு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே காட்டையாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் (வயது 34), உயிரிழந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமுத்திரம், ஜேபி நகரைச் சேர்ந்த பாலா (என்ற) பாலசுப்பிரமணி (வயது 32) என்பவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவ்விபத்தில் காயமடைந்த மதன்பாபு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.