திருச்சி விமான நிலையம் பகுதி சந்தோஷ் நகர் கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் ராஜா. இவரது மனைவி ஜூலியட் ரத்னா. சேவியர் ராஜா மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜூலியட் ரத்னா தனது கணவரைப் பார்ப்பதற்காக மஸ்கட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். மஸ்கட் பயணம் முடிந்து நேற்று முன்தினம் (மார்ச் 14) வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து ஜூலியட் ரத்னா ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் திருடிய மர்ம நபர் யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.