துவரங்குறிச்சி அருகே சிக்கிய 12 அடி நீளம் மலைப்பாம்பு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அயன்பொறுவாய் குடியிருப்பு பகுதியில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு இருந்ததாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், அந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி