திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளத்துப்பட்டியில் கடந்த 13ஆம் தேதி பிரபாகரன் என்ற நபர் பஸ் ஸ்டாப் அருகே சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரனின் மனைவி அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலனின் நண்பர் சரவணன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.