துறையூர் நல்லியயம்பாளையம் சிவன் ஆலயத்தில் திருக்கல்யாணம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நல்லியம்பாளையம் கைலாசநாயகி உடனுறை கைலாசநாதர் ஆலயத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உற்சவர் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கைலாச நாதர், கைலாச நாயகிக்கு மாங்கல்ய தாரணம் செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி