மணப்பாறை அருகே குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் இருவர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பாலக்குறிச்சி அருகே உள்ள பாலப்பட்டி வசிப்பவர் பெருமாள் இவரது மனைவி சுதா கடந்த எட்டாம் தேதி அன்று இவரது வீட்டில் நல்லிரவில் புகுந்த மர்ம நபர்கள் இவரது ஒன்றரை வயது மகனை தூக்கிச் சென்றனர். 

சிறுவன் அழுகை சத்தம் கேட்டதும் சிறுவனின் தாய் தந்தை சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினருடன் மர்மநபர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளனர். ஊர்காரர்கள் விரட்டி வருவதை கண்டு ஊரின் அருகில் உள்ள மயான சாலையில் சிறுவனை இறக்கிவிட்டு அவன் கழுத்தில் இருந்த ஒன்றரை கிராம் தங்க தாயத்தை அறுத்து சென்றனர். இந்த நிலையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று தலைமறைவாக இருந்த சிவகங்கை மாவட்டம் திருமலைகுடியைச் சேர்ந்த அழகர் மகன் அர்ஜுன், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை சிங்கம்பட்டியை சேர்ந்த முக்கய்யா மகன் ஜீவா ஆகிய இருவரையும் வளநாடு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி