உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை திருச்சி முதலிடம்

கடந்த 2025 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. சமயபுரம், ஸ்ரீரங்கம் போன்ற ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் முக்கொம்பு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு 2025 ஆம் ஆண்டில் 2 கோடியே 13 லட்சத்து 17,745 பேர் வருகை தந்துள்ளனர். இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வாகும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி