திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என மாநகர போலீசார் சோதனை நடத்தினர். குட்டிமலை ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டபோது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, புகையிலை பொருட்களை விற்றதாக அஷ்ரப்அலி என்ற நபரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.