பின்னா் பி. ஆா். பாண்டியன் கூறியது: பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பஞ்சாப் மாநில அரசு காவல்துறையை ஏவி அறப்போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகளை போலக் கைது செய்தது கண்டனத்துக்குரியது.
குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டம் தொடா்பாக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடந்துவரும் நிலையில், அதற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பஞ்சாப் மாநில அரசு செயல்பட்டுள்ளது.
அரசியல் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் போராட்டத்தைச் சீா்குலைத்து, விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது. தமிழகத்தில் விவசாயிகள் தீவிரமாகப் போராடியதால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். சிறையில் கொடுமைப்படுத்தப்படும் மேலும் சில தலைவா்களை விடுவிக்க வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.