திருச்சி எஸ்பி அதிரடி நடவடிக்கை

திருச்சி மாவட்ட எஸ்பி ஆக செல்வ நகரத்தினம் அவர்கள் பொறுப்பேற்றது முதல் கடந்த மூன்று மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது இடங்களில் மதுபானம் அருந்துவதை கைது செய்தல், குண்டர் தடுப்பு சட்டத்திற்கு நடவடிக்கை, சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது என்பது உட்பட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளிலும் தீவிரம் காட்டப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிய 365 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டிய 713 பேர், டூவீலரில் இருவருக்கு மேல் பயணித்த 957 பேர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியதாக 2616 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சாலை விவரங்கள், திறந்தவெளிகள், வயிறு வலிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் மது அருந்தும் போக்கும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. 

குற்ற செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் அச்சமின்றி இரவு நேரங்களில் நடமாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளால் இவை அனைத்தும் சாத்தியமாகப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி