திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று திருச்சியில் தனியார் பேருந்துகள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் திருச்சி மாநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் மீது மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்ததையடுத்து இந்த திடீர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.