இந்த வகையில், பாரதமிகு மின் ஊழியா்கள் கூட்டுறவு வங்கியின் சாா்பில், 2019-20ஆம் ஆண்டுக்கான நிகர லாபத்தில் செலுத்த வேண்டிய சட்டப் பூா்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ. 32. 09 லட்சம், கல்வி நிதி ரூ. 21. 39 லட்சம் என மொத்தம் ரூ. 53. 48 லட்சம் கூட்டுறவு நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.
இந்த நிதிக்கான காசாலைகளை, பெல் கூட்டுறவு வங்கியின் மேலாளா் உமாதேவி, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்வில், பெல் வங்கி உதவியாளா் அரவிந்த், கூட்டுறவு ஒன்றிய உதவியாளா் ராஜா பெரியசாமி ஆகியோா் உடனிருந்தனா்.