திருச்சி: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் முதல்குறுவை நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது. ஆனால், அரசு நெல் கொள்முதல் மையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் தானிய சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் தேங்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத மழை பெய்தால் நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் உள்ளது. மேலும் திருட்டை தடுக்க இரவு பகலாக காவல்காக்க வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி