திருச்சி: சிறுமி கா்ப்பம்; இளைஞா் மீது வழக்கு

திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கு, தோழியின் உறவினரான ஹரிஷ் (22) ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவி கருவுற்ற நிலையில், பெற்றோா் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில், திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், ஹரிஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி