திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு பேட்டிக் விமானம் புதன்கிழமை இரவு புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணிக்கவிருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப் பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். 

இதில், சிவகங்கை மாவட்டம் பெரிய கொட்டப்பட்டியைச் சேர்ந்த ச. கர்ணன் (53) என்பவர் அவரது கடவுச்சீட்டில் பெற்றோர் பெயர் மற்றும் அவரது பிறந்த தேதி, ஊர் உள்ளிட்டவற்றை போலி ஆவணங்களைக் கொண்டு மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக குடியேற்றப்பிரிவினர் அளித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கர்ணனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி