இந்நிலையில் கடந்த மாதம் வேலை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய மனோஜ் குமார் சோர்வாக இருந்தார். யாரிடமும் அதிகமாக பேசவில்லை. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது மனோஜ் குமார் மின்விசிறியின் ஊக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது சம்பந்தமாக தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அவரது தாயார் மெர்ஜின் லூசியா துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.