திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த 82 வயதான சுசிலா, வீட்டில் கழிவறைக்குச் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுசிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.