திருச்சி மேஜர் சரவணன் சாலை அருகே மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட முதியவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் கரூர் மாவட்டம், குரும்பப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (82) என்றும், குடும்பத்தைப் பிரிந்து திருச்சியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.