மதுரை மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் (30) என்பவர், சனிக்கிழமை மாலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த தூத்துக்குடி வெற்றிவேல் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.