திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவன ஊழியர் பாலசங்கரின் இருசக்கர வாகனம் 2015ல் காணாமல் போனது. இது தொடர்பாக முசிறியைச் சேர்ந்த தங்கதுரை கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2019ல் ஜாமினில் வெளியே வந்த தங்கதுரை தலைமறைவானார். 7 ஆண்டுகளாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் தங்கதுரையை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.