திருச்சி: மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல்.. 5 பேர் கைது

திருச்சி குடியுரிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்பி உத்தரவின் பேரில் காவல்துறை டிஎஸ்பி வின்சென்ட் அறிவுரைப்படி சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிபடை அமைக்கப்பட்டு சமயபுரம் டோல் பிளாசா அக்கரைப்பட்டி செல்லும் சாலையில் வாகன சோதனை நடந்தது.இதில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த லோடு வாகனங்களை சோதனை செய்தபோது இரண்டு வேன்களில் ரேஷன் அரிசி கருப்பு அரிசி குருணை மூட்டைகள் மறைத்து மாட்டுத்தீவனத்துக்கும் கோழி தீவனத்திற்கும் விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது. 

இதிலிருந்து 44 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் இருந்த 2200 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்த பயன்படுத்திய இரண்டு லோடு வண்டிகளையும் கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்ட தாராநல்லூர் சண்முகம் பூனம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ், மண்ணச்சநல்லூர் சேர்ந்த லோகநாதன் தாளக்குடியை சேர்ந்த மாதவன் மற்றும் ராசாம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி