திருச்சி: குழந்தைகள் காப்பகத்தில் 4 பேர் கைது

திருச்சி கே கே நகர் வயர்லெஸ் சாலையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகாரைத் தொடர்ந்து, 83 குழந்தைகள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், குழந்தைகளுக்கு உணவு வழங்காமல் தாக்கப்பட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா அளித்த புகாரின் பேரில், காப்பகத்தின் கண்காணிப்பாளர்கள் உமா, தமிழரசி, உளவியல் ஆலோசகர் பென்சியா ரோஸி, சமையல் அலுவலர் ஆஷாபானு ஆகிய 4 பேர் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி