திருச்சி: சிறை முகாமில் இலங்கை தமிழர்கள் 20 பேர் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 20 பேர், தங்களை விடுவித்து சொந்த நாட்டுக்கு அனுப்பக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. சிறப்பு முகாம் அதிகாரிகள் தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், ரூவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி