திருச்சி மாவட்டம், சோழமாதேவி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயலலிதா (59) கடந்த ஜனவரி 28-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் வந்துள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளை கழற்றி பர்ஸில் வைத்து கைப்பையில் வைத்திருந்தார். பேருந்து காட்டூர் ஆயில்மில் அருகே வந்தபோது, கைப்பையில் வைத்திருந்த நகைகள் இருந்த பர்ஸ் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயலலிதா அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.